கொச்சி,

கேரள மாநிலத்தில் கொச்சி பகுதியில் ஒரே நாள் இரவில் மட்டும் மருத்து அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 794 பேர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது.

மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களால் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதை தொடர்ந்து கொச்சி பகுதி போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கொச்சி மாவட்ட போலீஸ் ஐ.ஜி.பி.விஜயன் உத்தரவின்படி, கொச்சியை சுற்றி உள்ள எர்ணா குளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புலா பகுதிகளில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தொடங்கப்பட்ட இந்த அதிரடி சோதனை மறுநாள் காலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. ஒரே நேரத்தில் 264 இடங்களில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது, அந்த பகுதிகளில் வந்த அனைத்து வாகனங்களும் சோதனையிடப் பட்டன.

இந்த அதிரடி சோதனை காரணமாக, போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக 57 பேர் மீது 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும்,  அலட்சியமாகவும், அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியதாக 518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட தாகவும்,  மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் ப5685 பேர் மீது பல்வேறு வழக்குகளும், இதில்  205 பேரில் 189 பேர்மீது மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 486பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத வழக்கும், 42 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் காரணமாக 508 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும், போதைக்கு அடிமையான 230 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர, இந்த சோதனையின்போது வழக்கு பதிவு செய்யப்பட்ட  721 நபர்களில், 64 பேர் மத அடிப்படையிலான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பதாகவும் அது குறித்து விசாரணை நடைபெற்ற வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த அதிரடி சோதனையின்போது அந்த வழியாக இயக்கப்பட்ட 346  சொகுசு பேருந்துகளும் சோதனையிடப்பட்டதாகவும், அந்த வாகனங்களின் டிரைவர்களும் மது சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆபரேஷன் குண்டோ மற்றும் 64 பேரில் மத அடிப்படைவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.