பா.ஜ.கவுக்கு எதிராக ‘மிஷன் தெற்கு’:  ராகுல்காந்தியின் பலே திட்டம்!

டில்லி,

தென் மாநிலங்களில் காலூன்ற நினைக்கும் பாரதியஜனதாவுக்கு எதிராக  ‘மிஷன் தெற்கு’  என்ற  பலே திட்டத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி.

 

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பாரதியஜனதா கோலோச்ச நினைக்கும் தென்மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த சுற்றுப்பயண;k  ‘மிஷன் தெற்கு’ என வர்ணிக்கப்படுகிறது.

இந்த பயணத்தின் நோக்கம்,  தென்மாநிலங்களில் காலூன்ற முயற்சி செய்துவரும் பாரதியஜனதா  அரசுக்கு எதிராக, மாநில அரசுகளுடன் வலுவான  கூட்டணி அமைத்து, ஆளும் பாரதியஜனதா அரசுக்கு கடும் சவாலை ஏற்படுத்த வேண்டும் என்பதே குறிக்கோள்.

இந்த வார இறுதியில் தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடுகளுக்கு வர இருக்கும் ராகுல்காந்தி, மாநிலங்களில் காங்கிரசின் பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்றும், அப்போது மத்தியஅரசுக்கு எதிரான பிரசாரத்தை பலப்படுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 1)  ஐதராபாத் வரும் ராகுல்காந்தி அங்கு சங்கரடி பகுதியில் நடைபெற இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஊர்வலத்தில் கலந்துகொள்கிறார்.

அதைத்தொடர்ந்து தமிழகம் வரும் ராகுல், ஜூன் 3 ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள்  மற்றும் சட்டமன்ற வைரவிழா  கொண்டாட்டங்களில் கலந்து கொள்வார்.

இந்த விழாவில்,   பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா,  ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத், என்.சி.பி. தலைவர் ஷரத் பவார்,  திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் சுதிப் பந்தோபாத்யா,  சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ எம்.பி. டி. ராஜா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த விழாவில், ராகுல்காந்தி உள்பட பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்துகொள்வதின் மூலம்,  காங்கிரஸ் தலைமையின்கீழ் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, ஆளும் மத்திய அரசுக்கு எதிராக பொதுவான களம் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ஜூன் 4ந்தேதி ஆந்திரா செல்லும் ராகுல், குண்டூரில் நடைபெறும் பேரணி ஒன்றில் கலந்துகொள்கிறார். அந்த பேரணியில்  கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

அந்த கூட்டத்தில்,  சமாஜ்வாடி கட்சித் தலைவர்  அகிலேஷ் யாதவ்  மற்றும்  இடது கட்சிகளின் தலைவர்கள்  பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பேரணியில் ஏழு முதல் எட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர்களுடன் ராகுல்காந்தி, பாரதியஜனதா அரசை எதிர்கொள்வது குறித்து உரையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஜூலை மாதம் வர இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக பொதுவான, வலிமையான ஒரு வேட்பாளரை நிறுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது முடிவெடுக்கப்படலாம் என்றும்  கூறப்படுகிறது.

ஏற்கனவே எதிர்க்கட்சிக்ள சார்பில்  டில்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், இந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்துவுடன் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் குறித்து சோனியா காந்தி திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பிஎஸ்எஸ் தலைவர் மாயாவதி ஆகியோரை சமாஜ்வாடி கட்சித் தலைவர்  அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.

You may have missed