டில்லி

கேந்திரிய வித்யாலயா என அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அமைச்சர் ஸ்ம்ரிதி இராணீ அதிகம் சிபாரிசு செய்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா என அழைக்கப்படும் மத்திய அரசு பள்ளிகளில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.   மத்திய அமைச்சர் ஒவ்வொருவரும் நாட்டில் உள்ள அனத்து கேந்திரிய வித்யாலயாக்களும் சேர்ந்து 450 மாணவர்கள் வரை சிபாரிசு செய்ய முடியும்.  அரசு உத்தரவுப்படி மத்திய அமைச்சர் சிபாரிசு செய்யும் மாணவருக்கு கேந்திரிய வித்யாலயா இடம் அளிக்க வேண்டும்.  பொதுவாக மத்திய அரசுப் பணியில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு முதலிடம் அளிக்கப்படும்.   ஆனால் ஒரு வகுப்பறையின் மொத்த மாணவர்களும் நிரம்பிய நிலையில் சிபாரிசை நிறுத்தி வைக்க பள்ளி முதல்வருக்கு அதிகாரம் உண்டு.

வருடா வருடம் அமைச்சர்கள் அளிக்கும் சிபாரிசின் நிலை பற்றி ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு அளிக்கப்பட்டது.  அந்த மனுவுக்கு கேந்திரிய வித்யாலயா தலைமை நிர்வாக அலுவலகம் பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில், “கடந்த 2015-16 கல்வி ஆண்டில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி 5128 மாணவர்களை சிபாரிசு செய்துள்ளார்.  அவருக்கு அளிக்கப்பட்ட கோட்டாவின் அளவு 450 மட்டுமே ஆகும்.   அதில் 3500 மாணவர்களுக்கு மட்டுமே நிர்வாகத்தால் இடம் அளிக்க முடிந்தது.   அடுத்த 2016-17 கல்வி ஆண்டில் அவர் அதே கோட்டாவான 450 இடங்களுக்கு 15065 மாணவர்களை சிபாரிசு செய்துள்ளார்.  ஆனால் நிர்வாகத்தால் அதில் 8000 மாணவர்களுக்கு மட்டுமே நிர்வாகத்தால் இடம் அளிக்க முடிந்துள்ளது.

அவருக்கு அடுத்தபடியாக மனித வள மேம்ப்பட்டுத் துறை அமைச்சராக ஏற்ற பிரகாஷ் ஜாவேத்கர் 2017-18 கல்வி ஆண்டில் அக்டோபர் 10 வரை 15192 மாணவர்களுக்கு சிபாரிசு செய்துள்ளார்.  (அதில் எத்தனை பேருக்கு இடம் அளிக்கப்பட்டது என்னும் தகவலை நிர்வாகம் அளிக்கவில்லை).  கடந்த 2015 லிருந்து 2018 வரை உ ள்ள ஆண்டுகளில் அதிக சிபாரிசு செய்தது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள் மட்டுமே” என குறிப்பிடப்பட்டுளது.