டி.ராஜேந்தர் தாத்தாவானார்

சென்னை,

திரையுலக அஷ்டாவதியான டி.ராஜேந்தர் தாத்தாவானார். சிலம்பரசன் மாமாவானார்.

தமிழ் திரையுலக முன்னணி தயாரிப்பாளரான டி.ராஜேந்தரின் மகள்  இலக்கியாவிற்கும் ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம்  நடைபெற்றது.

கர்ப்பமாக இருந்த இலக்கியா பிரவத்திற்காக தாய்வீட்டுக்கு ஏற்கனவே வந்திருந்தார்.  நேற்று மாலை அவர் வயிற்று வலி ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக டி.ராஜேந்தர் தாத்தாவானார். நடிகர் சிம்புவும் மாமாவானார்.

இதனால் மகிழ்ச்சியில் திளைத்த டி.ஆர். குடும்பத்தினர், மருத்துவமனை ஊழியர்கள் அனை வருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed