சீனா: போராட்டத்தில் குதித்த நீக்கப்பட்ட ராணுவ வீரர்கள்!

--

 

 

பீஜிங்:

சீன ராணுவத்தின் செலவுகளை குறைக்க சுமார் 3 லட்சம் வீரர்கள் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து நீக்கப்பட்ட ராணுவ வீரர்கள் போராட்டத்ல் குதித்து உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ராணுவ படையை உருவாக்கி இருந்தது சீனா. தற்போது சீனாவின் மக்கள் விடுதலை ராணுத்தில் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர்.

இதன் காரணமாக ராணுவத்திற்கான செலவுகள் எல்லை மீறி செல்வதாக விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங், செலவுகளை குறைக்கவும், உதிரி படைகளை குறைக்கவும் தேவையற்ற பதவிகள் மற்றும் வீரர்களை குறைக்கவும் உத்தரவிட்டார்.

இதன் காரணமாக சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

china

நேற்று திடீரென நீக்கப்பட்ட வீரர்கள் திரண்டு வந்து  சீனாவின்  தலைநகர் பீஜிங்கின் தலைமை பாதுகாப்பு அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் பல மணி நேரம் நீடித்தது.  பத்திரிகைகள் அவர்களை பேட்டி எடுக்க தடுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றிய செய்திகள்  இணையதளங்களில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு வீரர்கள் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்து  கைது செய்தனர்.