சான்பிரான்சிஸ்கோ:

யங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், அதை ஊக்கும்விக்கும் வகையிலும் தகவல் பதிவிட்ட டிவிட்டர் பயனர்களை டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கி உள்ளது. சுமார்  1.6 லட்சம் பயனர் களின் கணக்குகளை நீக்கி இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளது.

சமூக வலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவை மூலம் தவறான தகவல்களும், வதந்திகளும், ஒரு தரப்பினருக்கு ஆதரவான பதிவுகளும் வைரலாகி பல்வேறு சமூக சீர்கேடுகளையும், கலவரங்களையும் உருவாக்கி வருகின்றன.

இதன் காரணமாக, சமூக விரோத பதிவுகளை தடுக்க சமூக வலைதளங்களுக்கு பெரும்பாலான அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. அதுபோல இந்திய அரசு தரப்பிலும் சமூக வலைதள நிறுவனங் களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பதிவுகள் இடப்பட்ட 1.6 லட்சம் பயனர்களின்  கணக்குகளை கடந்த  6 மாதங்களில் நீக்கியிருப்பதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 86 நாடுகளின் அரசுகளிடமிருந்து தங்களுக்கு வந்த தகவலை தொடர்ந்து, மொத்தம் 1 லட்சத்துக்கு66ஆயிரத்து 513 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது.

இதில், 2018 ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பதிவுகள் பதியப்பட்ட 1.6 லட்சம்  கணக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாக கூறி உள்ளது.