Random image

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் 6வது இடம் பிடித்த ரஜினி வில்லன்..

வ்வொரு ஆண்டும் உலக அளவில் பிரபலமான நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்ற பட்டியலை ஃபோர்பஸ் இதழ் வெளி யிட்டு வருகி றது. இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.


இந்தி நடிகரும் ரஜினியின் 2,0 படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய் குமார் டாப் 10 லிஸ்டில் 6வது இடம் பிடித்திருக் கிறார். அவர் மொத்தம் 48.5 மில்லியன் டாலர்கள் சம்பாதித்து உலக அளவில் 6-வது இடத்தை பிடித்திருக்கிறார். அதாவது இந்தியமதிப்பில் 362 கோடி ரூபாய்.
சென்ற ஆண்டு ஜூன் 1ம்தேதி தொடங்கி இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி வரையி லான கால கட்டத்தில் இந்த சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது
அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த வருடம் மிஷன் மங்கள், ஹவுஸ்ஃபுல் 4, குட் நியூஸ் ஆகிய படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி இருந்தது. அதன் பிறகு மேலும் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
போர்பஸ் பட்டியலில் முதல் இடத்தை ஹாலிவுட் நடிகரும் டுவைன் ஜான்சன் பிடித்திருக்கிறார். இவருக்கு தி ராக் என்கிற இன்னொரு பெயரும் இருக்கிறது. ராக் கடந்த வருடத்தில் 87.5 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறார்.
நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரியான் ரெனால்ட்ஸ் இருக்கிறார். அவர் மொத்தம் 71.5 மில்லியன் டாலர்கள் ஒரு வருடத்தில் சம்பாதித்திருக்கிறார். 3வது இடத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மார்க் வால்பெர்க் (Mark Wahlberg), இவர் 58 மில்லியன் பெற்றிருகிறார். 4வது இடத்தை நடிகர் மற்றும் இயக்குனர் பென் அப்லெக் (Ben Affleck0 ) பிடித்திருக்கிறார். அவர் 55 மில்லியன் டாலர்கள் 2020ல் சம்பாதித்து இருக்கிறார். 5வது இடத் தினை வின் டீசல் பெற்று இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தினை தான் அக்ஷய் குமார் பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக் கும் தொகை வரி செலுத்துவதற்கு முந்தையது என ஃபோர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது.