லப்புழை:

லைகளின் சீற்றம் பற்றி கடலோரமாக நின்று செய்தி அளித்துக்கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளரை வேகமாக வந்த அலை ஒன்று பின்னந்தலையில் அடிக்க… அதிர்ச்சி அடைந்தாலும் நிலைகுலையாமல் செய்தியை அவர் சொல்லி முடித்த சுவாரஸ்யமான சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது.

நியூஸ் 18 தொலைக்காட்சியின் கேரள செய்தியாளர் அனீஷ். சமீபத்தில் இவர், ஆலப்புழையில் கடல் அலைகளின்  அதீத சீற்றத்தால்  வீடுகள் இடிந்தன. வீடிழந்த மக்கள் உண்ண உணவின்றி தவித்தர். மக்களின் இந்த அவல நிலை குறித்து செய்தி சேகரிக்க அங்கு சென்றிருந்தார்.

சீறும் அலைகளின் பின்னணியில் ஒரு குடை பிடித்தவாறு தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

”பல நாட்களாக இங்கு அலைகளின் சீற்றம் தொடர்கிறது,  பல வீடுகள் பாதிக்கப்பட்டு, மக்கள் வீடின்றி, உணவின்றி தவிக்கிறார்கள்.  ஆனால்…” என அவர் உரையை முடிக்கும் முன்  திடீரென பின்னால் வந்த ஒரு ராட்சத அலை அவரின் பின்னந்தலையில் அடித்தது. அவர் வைத்திருந்த குடை சின்னா பின்னமானது.

ஆனாலும்  தொடர்ந்து, “இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரியும் இவர்களைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை” என முழு உரையையும் தைரியமாக சொல்லி முடித்தார்.  அவரின் இந்த செய்கை செய்தியாளர்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்றது.

ஆனால் அதிகாரிகள் மத்தியில் இது வெறும் நகைப்புக்குரியதாகி விட்டது.   கோழிக்கோடு முன்னாள் ஆட்சியாளர் பிரசாந்த் நாயர் இது பற்றி தனது முகநூல் பக்கத்தில் ”பாதிக்கப்பட்ட பகுதியை அதிகாரிகள் திரும்பிப்  பார்க்கவில்லை என்று கூறும் செய்தியாளர், தன் பின்னே  திரும்பிப் பார்த்திருக்க வேண்டும்.  இல்லையெனில் இப்படி அலையால் தாக்கப்படுவதுதான் நடக்கும்” என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார்.

[youtube https://www.youtube.com/watch?v=z4wRW-8jmO4]