முனிராஜ்

திருப்பத்தூர்:

காதல் திருமணம் செய்து வைத்த செய்தியாளர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டது திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜெய்பீம் நகர் பகுதியை சேர்ந்த முனிராஜ் (28) என்பவர் தினசெய்தி பத்திரிக்கையில் செய்தியாளராக பணியாற்றிவந்தார். இந்த நிலையில் நேற்று அவரை  மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த முனிராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார்.

பிணமாக..

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முனிராஜ், தனது நண்பர் சிவா என்பவருக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததாகவும் இதனால் ஆத்திரமான பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் சிலர் முனிராஜை வெட்டிக்கொன்றதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

செய்தியாளர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.