அபுதாபி இளவரசர் டெல்லி வருகை! பிரதமர் மோடி வரவேற்பு!!

டில்லி,

ந்தியாவின் குடியரசுதின சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவசரர் இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார்.

இந்தியாவின் 68-வது குடியரசு தின விழா வரும் நாளை (26-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

இந்தஆண்டு டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இதையொட்டி மூன்று நாள் பயணமாக அவர் நேற்று டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டிப்பிடித்து மற்றும் கைக்குலுக்கி வரவேற்றார்.

நாளை நடைபெறும் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பின் போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அணிவகுப்பை கண்டுகளிக்கிறார்.

அபுதாபி இளவரசர் தனது பயணத்தின் போது குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இரு தலைவர்களையும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது ஐக்கிய அமீரகம் – இந்தியா இடையே வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

மேலும் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து அறிக்கை வெளியிட உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Republic Day Special guest: Prince of Abu Dhabi to visit Delhi! - Prime Minister's Reception, world, அபுதாபி இளவரசர் டெல்லி வருகை! பிரதமர் மோடி வரவேற்பு!!
-=-