ந்தியாவை 350 வருடங்கள் ஆண்ட முகலாய பேரரசின் கடைசி அரசர் பஹதூர் ஷா ஸவரின் வாரிசுகள் இன்று வாழ வசதியின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கடைசி முகலாய பேரரசராக இருந்த பகதூர் ஷா ஜாஃபர்.  ஒரு அரசராக மட்டும் இருக்கவில்லை. அவர் சூஃபி ஞானி, ஒரு சிறந்த உருது கவிஞர். ரங்கூனில் (யாங்கூன்) 1862-ம் ஆண்டு, சிதில மடைந்த ஒரு மரவீட்டில், பகதூர் ஷா ஜாஃபர் தனது கடைசி மூச்சை சுவாசித்த போது, அவரை சுற்றி அவரது நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே இருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

பகதூர் ஷாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ்காரரர்கள், அவர் இறந்த பிறகு, அவரது பிரேதத்தை புகழ் பெற்ற ஷ்வைடகன் பகோடா என்னும் இடத்தின் அருகே உள்ள அடையாளம் குறிக்கப்படாத ஒரு இடத்தில் புதைத்ததாகவும்  கூறப்படுகிறது.

தோல்வி, மனசோர்வு, அவமானம். இப்படிதான் இந்தியா, பாகிஸ்தன், வங்கதேசம், ஆஃப்கனின் சில பகுதிகளை முந்நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒரு பேரரச வம்சாவழியின் கடைசி அரசனின் முடிவு அமைந்தது.

ஜாஃபர் பொறுப்பேற்றபோது, அவரது ஆளுகையின் கீழ் டெல்லியும், அதன் சுற்று வட்டார பகுதிகளும் மட்டும்தான் இருந்தன. இருந்தபோதிலும், அவர் பேரரசராக போற்றப்பட்டார். மற்ற முகலாய பேரரசர்களை போல, இவரும் மங்கோலிய அரசர்களான செங்கிஸ்கான் மற்றும் தைமூர் வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இவரது இறப்பின் மூலமாக, உலகின் பெரிய வம்சாவளியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.புகழ்பெற்ற டில்லி செங்கோட்டை, தாஜ் மஹால் என்று பல வியத்தகு கட்டிடங்களை கட்டிய மொகலாயப் பேரரசின் ஒரு வாரிசின் நிலை தற்போது நிலைகுலைந்துபோய் உள்ளது. தற்போது உயிருடன் வாழ்ந்து வரும் அவரது கடைசி வாரிசுகள்   வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். தங்களது வாழ்வாதாரத்துக்கு நிதி உதவி கோரி அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள்.

‘மாதம் 6000 ரூபாய் பென்ஷன் வாங்கிக் கொண்டு கொல்கத்தாவில் சிறிய வீட்டில் வசித்து வருகிறார் தனது மகனுடன் சுல்தானா பேகம்.  இவர் முகலாய பேரரசின் கடைசி அரசர் பஹதூர் ஷா ஜாஃபர் பேரன் மறைந்த மிர்சா பகத்தின் மனைவி. அவருக்கு மேலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது, நவி மும்பையில் ஒற்றை படுக்கையறை வீட்டில் வசிக்கிறார்கள். மிகுந்த சிரமங்களுக்கு இடையே வாழும் இவர்கள் அரசிடம் தங்களுக்கு நிதி உதவி கோரி போராடி வருகிறார்கள்.

நாட்டின் பாரம்பரியம் மிக்க கட்டிங்களை எழுப்பி, நமது நாட்டுக்கு அடையாளத்தை ஏற்படுத்திய முகலாய அரச குடும்பத்தின் வாரிசுகளை வாழ வைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.