மறு தணிக்கை செய்ய கோரிக்கை!  2.0 வெளியீட்டில் சிக்கல்?

ஜினி நடித்த 2.o திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்று செல்போன் நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளதை அடுத்து, குறிப்பிட்ட படி வரும் 29ம் தேதி படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினி மற்றும் ஷங்கரின் கூட்டு முயற்சியான 2.o திரைப்படம் நாளை மருநாள் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த 2010ஆம் வருடம் இதே கூட்டணியில் உருவான எந்திரன்  திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படும் இந்தப்படத்தில், ரஜினியுன்  அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

நானூறு கோடி ரூபாய்க்கு மேலம் செலவழித்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் 6600ல் இருந்து 6800 வரையான திரைகளில் இப்படம் திரையிடப்பட  இருக்கிறது.  படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தில் செல்போன்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும்,  படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்றும்  இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர் கோரியுள்ளனர். இது குறித்து மத்திய தணிக்கைத் துறை, தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்திற்கு இன்று மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், : 2.0  படத்தில் எந்தவித ஆதாரமும் இன்றி செல்போன்களை தவறாக சித்தரித்திருப்பதாக தெரியவருகிறது. படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும் விளம்பர வீடியோக்கள் மூலம் இது தெரியவருகிறது. ஆனால் அப்படி காண்பிப்பது போல, செல்போன்களை கட்டுப்படுத்துவதற்கு எந்தவித தொழில்நுட்பங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே இந்தப் படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செல்போன் என்பது தற்போதைய நவீன  யுகத்தில் மிக முக்கியானதாக ஆகிவிட்ட நிலையில், இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர் கோரிக்கையை மத்திய தணிக்கைத் துறை அல்லது தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை ஏற்றால்,  மறுதணிக்கை செய்ய வேண்டி வரலாம் என்றும், அப்படி நடந்தால் குறிப்பிட்டபடி நாளை மறுநாள் 2.o திரைப்படத்தை திட்டமிட்டதுபோல வெளியிட முடியாது என்றும் கூறப்படுகிறது.