டில்லி,

டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முற்பகல் 11.15 மணி அளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழக அரசியல் நிலவரம், ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக கோரிக்கை மனுவை பிரதமர் வழங்கினார் முதல்வர்.

பின்னர் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பிரதமரிடம், தமிழகத்துக்க  நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வலியுறுத்தியுள்ளேன்  என்றும், அரசியல் ரீதியாக எந்த விவாதமும் நடைபெற வில்லை என்றும் கூறினார்.

விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டது என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது எனவும் , இதேபோல் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி மோடியிடம் வலியுறுத்தப்பட்டது என்றும் கூறினார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களுக்கான  நிலுவைத்தொகை 17,000 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்க வலியுறுத்தியதாகவும்,  இலங்கை சிறைபிடித்துள்ள  தமிழக மீனவர்களின் 135 படகுகள் மற்றும் 11 மீனவர்கள் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

 

தமிழக சட்டமன்ற வளாகத்தில் மறைந்த முதல்வர்  ஜெயலலிதா படம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதை திறந்து வைக்க பிரதமரை அழைத்ததாகவும், அதேபோல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருட  டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் அந்த  நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் முதல்வர் கூறினார்.