புதுடெல்லி: ஆட்டோமொபைல் துறையிலிருந்து வைக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பு வேண்டுகோளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாது என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில் அத்துறையில் ஏற்பட்ட பெரியளவிலான வளர்ச்சியின் தாக்கமே இன்றைய சரிவு என்று நம்பப்படுவதால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு 28% என்பதிலிருந்து 18% என்பதாக குறைக்கப்படாது என்று நம்பப்படுகிறது.

கடந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியிலிருந்துதான் அத்துறையில் நெருக்கடி துவங்கியது என்பது கவனிக்கத்தக்கது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போது 17% விற்பனை வீழ்ந்துள்ள நிலையில், கடந்த 2018ம் ஆண்டின் ஏப்ரல் – ஜுன் வரையான காலகட்டத்தில் 18% உயர்வு இருந்தது. கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக இத்துறை நல்ல லாபம் ஈட்டி வந்தது. எனவே, பிற தொழில்களைப் போன்றுதான் இதிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொழிலிலும் ஏற்றமும் இறக்கமும் ஏற்படுவது

இயல்வே. எனவே, இதற்காக வரிவிதிப்பு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவையில்லை. கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் பல நாடுகளில் இத்துறையில் விற்பனை சரிவு ஏற்பட்டது.

எனவே, இத்தகைய காரணங்களால் ஜிஎஸ்டி வரிவிதிப்பை 28% என்பதிலிருந்து 18% என்பதாக குறைக்க முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.