தாய்லாந்து குகையில் எஞ்சியுள்ள 5 பேரை மீட்க தீவிர முயற்சி
சியாங் ராய்
தாய்லாந்து குகையில் சிக்கிய 13 பேரில் 8 பேர் மிட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ஐவரை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் தேதி தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகைக்கு ஒரு கால்பந்து பயிற்சியாளர் தன்னுடைய மாணவர்களான 12 சிறுவர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் சென்ற நேரத்தில் கன மழை காரணமாக குகையினுள் சிக்கிக் கொண்டனர். சுமார் 4 கிமீ தூரத்துக்குள் சென்றுள்ள 13 பேரும் ஒரு மேடான பகுதியில் தங்கி இருந்தனர்.
சகதியுடன் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் தவித்த அவர்களை மீட்புப் படையின் நீச்சல் வீரர்கள் கண்டு பிடித்தனர். குறுகிய குகைப்பாதை வழியாக அவர்களை நீச்சல் வீரர்களால் அப்போது உடனடியாக அழைத்து வர முடியவில்லை. மேலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்தது. அதனால் அந்த 13 பேரையும் உடனடியாக மீட்க மீட்புக் குழுவினர் முயன்றனர்.
அதன்படி நேற்று முன் தினம் 4 சிறுவர்களை மீட்டு கொண்டு வந்தனர். அவர்கள் சியாங் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 11 மணிக்கு 2ஆம் கட்ட மீட்புப்பணி தொடங்கியது. அந்த சமயத்தில் மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்ப்ட்டுள்ளனர். இவர்களுக்கும் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது குகையினுள் 5 பேர் உள்ளனர். இவர்களை மீட்கும் இறுதிக்கட பணி தொடங்கி உள்ளது. நீச்சல் வீரர்கள் இவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் அனைவரும் மீட்கப்படுவார்கள் என மீட்புப் படைத் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.