தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்களை மீட்கும் முயற்சி தொடங்கியது

மெய் சாய், தாய்லாந்து

வெள்ளத்தால் சூழப்பட்டு குகையில் மாட்டிக் கொண்ட சிறுவர்களை மீட்கும்  பணி இன்று தொடங்கியது.

 

தாய்லாந்து நாட்டின் மெய் சாய் பகுதியில் உள்ள தாம்லுவாங் குகையினுள் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் தனது 12 மாணவர்களுடன் சென்றுள்ளனர்.   அப்போது கடும் மழை காரணமாக வெள்ளம் குகையினுள் புகுந்ததால் அனைவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.    மழை சற்றே நின்றதும் அவர்களை தேடி வந்த குழுவினர் அவர்கள் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் குகை வாயிலில் இருப்பதை கண்டு அவர்கள் குகையினுள் உள்ளதை கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு பன்னாட்டு நீச்சல் வீரர்கள் அந்த குகையினுள் நீந்திச் சென்ற போது அவர்கள் உயிருடன் இருப்பதை சுமார் 10 நாட்களுக்கு பின் கண்டறிந்தனர்.   குகையினுள் சேறும் சகதியும் உள்ள வெள்ளம் உள்ளதால் மாணவர்களை வெளியே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் உள்ளே சென்று நீச்சல் வீரர்கள் அளித்தனர்.   அவ்வாறு அளித்த வீரர் ஒருவர் வெளியே வரும் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் அவர்களை மீட்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. மட்டிக்கொண்ட மாணவர்கள் நீச்சல் அனுபவம் இல்லாத சிறுவர்கள் என்பதால் குறுகிய நீர்ப்பாதையில் அவர்களை மீட்டு அழைத்து வருவது சிரமமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.    ஆனால் மீட்புக் குழு தலைவர் தற்போது மீண்டும் மழை பெய்ய வாய்ப்புக் குறைவாக உள்ளதாலும் அதிகம் நீர் வடிந்து விட்டதாலும் மீட்புப் பணி சுலபமாக  நடக்கும் என தெரிவித்துள்ளார்.  மேலும் இன்னும் சுமார் 11 மணி நேரத்தில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை அளித்துள்ளார்