பசுவின் சாணத்தில் பற்பசை தயாரிக்க ஆராய்ச்சி !!

டெல்லி :

 

நாட்டு பசுவின் கோமியம் மற்றும் சாணத்தில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களான பற்பசை, ஷாம்பு மற்றும் கொசு வத்தி தயாரிக்கும் ஆய்வு செய்வோரை ஊக்கப்படுத்த மத்திய அரசு திட்டம்.

அரசு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் நிதியுதவி மூலம் இந்த ஆய்வை மேற்கொள்ள புதிய திட்டம் ஒன்றை வெள்ளிக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு ‘சூத்ரா-பி.ஐ.சி இந்தியா‘ என்று பெயரிட்டுள்ளது.  அறிவியல் பயன்பாட்டின் மூலம் ஆராய்ச்சியை பெருக்கி சுதேசி பசுக்களைக் கொண்டு பிரதான தயாரிப்புகள் செய்யும் இந்த திட்டத்தை அரசு புதிதாக செயல்படுத்தியுள்ள பல்வேறு அமைச்சகங்களின் கூட்டு நிதியில் இருந்து நிதியளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி திட்டத்திற்கு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இது குறித்த ஆய்வில் இருக்க கூடிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்க பட்டிருக்கிறது.

பசுவின் கோமியம் மற்றும் சாணத்தில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமல்லாது புற்று நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கும் இதன்மூலம் தீர்வுகிடைக்குமா என்றும் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.

இந்த திட்டத்திற்கென ரூ. 98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசின் இந்த முயற்சி முதல் முறை இல்லை என்ற போதும், இதற்கான வரவேற்பு இம்முறை எப்படி இருக்கும் என்று அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

 

– நன்றி : தி பிரிண்ட்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'COW' donation: The benefits of worshiping the cow, a cow sanctuary in each state: MoS Home
-=-