அறிவியல் ஆய்வகத்தில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்து விபத்து – விண்வெளி ஆய்வு பொறியாளர் பலி!

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஹைட்ரன் சிலிண்டர் வெடித்ததில் விண்வெளி ஆய்வு பொறியாளர் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த 3 பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

seath

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் 32வயதான விண்வெளி ஆய்வு பொறியாளர் மனோஜ் உயிரிழந்தார். இவர் ஹைட்ரோசோனிக் மற்றும் அதிர்வலை ஆராய்ச்சி மையத்தில் விண்வெளி ஆய்வு பொறியாளராக பணியாற்றி உள்ளார். அதுமட்டுமின்றி, சூப்பர் வேவ் டெக்னாலஜி என்ற நிறுவனத்துடன் இணைந்தும் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

இந்த விபத்து குறித்து அறிவியல் நிறுவ்னத்தின் தலைமை பாதுகாப்பு அதிகரி எம்.ஆர்.சந்திரசேகர் கூறுகையில், “ ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் பொறியாளர் மனோஜ் உயிரிழந்துள்ளார். மேலும், கார்த்திக், அதுல்யா மற்றும் நரேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பணியாளர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது “ என்று கூறினார்.

அறிவியல் நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சதாசிவநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.