சிகா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் வேளையில் அந்த வைரஸின் தாக்குதலில் இருந்து சிசுக்களை பாதுகாக்கும் புதிய நோய் எதிர் பொருளை (antibody) அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

mozi_zika

கொசுக்கள் மூலம் பரவும் சிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறிய தலையுடனும் மூளை வளர்ச்சி குறைபாடுகளுடனும் கூடிய குழந்தைகள் பிறக்கும் என்பது பலரும் அறிந்த உண்மை. சிகா வைரஸ் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் மருந்துகள் குறித்து அமெரிக்காவின் வண்டர்பில்ட் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுவந்தனர்.
அவர்கள் தற்பொழுது ZIKV-117 என்ற நோய் எதிர் பொருள் சிகா வைரஸ் பாதிப்பு சிசுவுக்கு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது என்று என கண்டறிந்துள்ளனர். எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் சிகா வைரஸ் பிரச்சனைக்கு இது பெரிய தீர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது.
சிகா வைரஸ் தாக்குதல் பிரேசில் நாட்டை உலுக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். இங்குதான் இந்த வைரஸ் தாக்குதல் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை இங்கு 4000 குழந்தைகள் சிறு தலையுடனும் மூளை வளர்ச்சி குறைப்பாட்டுடனும் பிறந்துள்ளன.
இந்த கண்டுபிடிப்பு தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக ஜேம்ஸ் குரெளனி என்ற ஆய்வாளர் தெரிவித்தார்.