பதவி உயர்வில் இட ஒதுக்கீடு – அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது: உச்சநீதி மனற்ம்

டில்லி:

தவி உயர்வில் இடஒதுக்கீடு கேட்பது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு  பணி பதவி உயர்வில், எஸ்,சி., எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரிமீலேயர் முறை பொருந்தாது என நாகராஜ் என்பவ;ர் தொடர்ந்து வழக்கில் 2006ம் ஆண்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்வது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, சட்டத்திற்குட்பட்டு இடஒதுக்கீடு வழங்கலாம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த விசாரணையின்போது அனுமதி அளித்தது. மேலும், அரசு பதவிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள்  பதவி உயர்வு பெற உச்சநீதி மன்றம் சில நிபந்தனைகளை விதித்து இட ஒதுக்கீடு வழங்கலாம் எனவும்  அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் வழக்கின் கடந்த  விசாரணையின்போது, அரசு பணிகளில் மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரப்பட்டது. இது தொடர்பாக மத்தியஅரசு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது உச்சநீதி மன்றம்.

இந்த வழக்கில் வாதாடிய நேற்று முன்தினம் வாதாடிய   முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் மற்றும் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன், உயர் பதவியில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பை  மீறும் செயல் என்று கூறினார். இதில் எந்தவிதமான பாகுபாடுகளும் அனுமதிக்கப்படக் கூடாது என்றவர், தகுதி மதிப்பில் சமநிலையில் இருக்க முடியாது என்பது  அரசியலமைப்பின் ஒரு அடிப்படை அம்சம், சமமான வாய்ப்பு என்பதால், ஒரே பணியாளர்களிடமிருந்து ஊழியர்களை எந்தவித பாகுபடுத்தலும் அனுமதிக்காது” என்று கூறினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்ப வர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஒரு நுழைவுவாயில் என்று தெரிவித்த நீதிபதிகள், அதே சமயம், எஸ்,சி., எஸ்.டி பிரிவைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பதை ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

இட ஒதுக்கீடு மூலம் பதவி உயர்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வழித்தோன்றல்கள், பின் தங்கியவர்களாக கருதப்படுவார்களா என்றும் கேள்வி எழுப்பிய நீதிபிதிகள்,  இட ஒதுக்கீடு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்தது. அதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.