டில்லி

சிஐசிஐ வங்கி முதலீட்டு பத்திரிகை விற்பனையில் விதிமுறைகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி ரூ.58.9 கோடி அபராதம் விதித்துள்ளது.

வங்கிகள் தங்களுக்கு முதலீடு ஈட்ட வாடிக்கையாளர்களிடம் எச் டி எம் எனப்படும் பத்திரங்களை வெளியிடுவது வழக்கம்.   இந்தப் பத்திரங்கள் முதிர்ச்சி அடையும் வரை மாற்றப்பட முடியாது.    இந்த பத்திரங்கள் யாருக்கு விற்கப்பட்டது என்பதும் இதற்காக எவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டது போன்ற விவரங்களும் ரிசர்வ் வங்கிக்கு அளிக்க வேண்டும்

ஐசிஐசிஐ வங்கி இது போல முதலீட்டு பத்திரங்களை விற்றது.   இந்த விற்பனையின் போது பல விதிமுறைகளை ஐசிஐசிஐ வங்கி பின்பற்றவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.   அத்துடன் விற்பனை விவரஙக்ள் எதுவும் ரிசர்வ் வங்கிக்கு தரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.   அதை ஒட்டி ரிசர்வ் வங்கி ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 58.9 கோடி அபராதம் விதித்துள்ளது.

தற்போது ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளுக்கு விதித்துள்ள அபராதத்தில் இதுவே மிகவும் அதிகமான தொகை என கூறப்படுகிறது.