டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர். இந்த வங்கியில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் அது குறித்த விவரங்களை கேட்டு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியில் மனு அளிக்கப்பட்டது.

இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில் விபரம்…

‘‘பொதுவாக எந்த வங்கியிலும் ரிசர்வ் வங்கி பொதுவாக தணிக்கை செய்தது கிடையாது. எனினும் ஆய்வு மேற்கொள்ளப்படும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2011ம் ஆண்டை தவிர 2007ம் முதல் 2017ம் ஆண்டு வரை ஆய்வு நடத்தப்பட்டது.

எந்த தேதியில் நடந்தது என்ற விவரம் இல்லை. இது குறித்த அறிக்கையை அளிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்க அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டால் விசாரணையை பாதிக்கும். இந்த விண்ணப்பத்தை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.