வனிதா விஜயகுமாருக்கு திருமண வாழ்த்து தெரிவித்த ரேஷ்மா….!

நடிகை வனிதா வரும் 27 ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார். பீட்டர் பால் என்ற விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை திருமணம் செய்ய உள்ளார்.

அவரது திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திருமணம் உண்மைதான் என அதிகாரப்பூர்வமாக அறிக்கை விட்டார் வனிதா.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமாருக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார் நடிகை ரேஷ்மா.பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வனிதாவுடன் நட்பு பாராட்டி வந்த இவர், தற்போது அவரது திருமண செய்தி கேட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.