மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்! மம்தா அதிரடி

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் வசிக்கும் மற்ற மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் யாரானலும் பெங்காலி கற்றுக்கொண்டு பெங்காலியில்தான் பேச வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சந்தித்து, போராட்டத்தை கைவிடும்படி கோரிய மம்தா,  மருத்துவர்கள் உடனே வேலைக்கு திருப்ப வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மம்தா,   மேற்கு வங்கத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை வெளி மாநிலத்தவர்கள் தூண்டி விடுவதாக குற்றம் சாட்டியவர், இதை தான்  கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவ மனைக்கு நான் ஆய்வுசெய்யச் சென்றபோது நேரடியாக பார்த்ததாகவு குற்றம் சாட்டினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திர மோசடி மூலம் சில இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று கூறியவர், இதன் மூலம் பெங்காலிகள் மற்றும் சிறுபான்மை யினரை தாக்கலாம் என பாஜக கருதினால் அதனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். குண்டர்களுக்கு எதிராக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியவர்,.  மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள்  ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் பெங்காலியில் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறினார்.