உத்தரபிரதேசம்: கைதான பாஜக எம்எல்ஏ.வுக்கு ஆதரவாக பேரணி

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிக்காபூர், சாபிபூர், பாங்கார்மானு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு ஆதரவாக பேரணி நடத்தினர்.

எம்.எல்.ஏ.விற்கு எதிராக சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டினர். பஞ்சாயத்து தலைவர் அனுஜ் குமார் தீட்ஷித் பேசுகையில், “எம்.எல்.ஏ.விற்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற சதிதிட்டம் தான் இது. மோசடியான குற்றச்சாட்டில் அவர் சிக்கவைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளட வேண்டும்,” என்றார்.