சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது! சபாநாயகர் தனபால் திட்டவட்டம்

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் சிஏஏ க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது!சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதையடுத்துதிமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சென்னை உள்பட தமிழகத்தில் சிஏஏக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருவதை சுட்டிக்காட்டி, தமிழக சட்டமன்றத்திலும் சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக இன்றைய கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சினை எழுப்பினார். அப்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்துபவர்கள் போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அமைதியான போராட்டத்தில் தடியடி நடத்த தூண்டியது யார்? என்றும் கேள்வி விடுத்தார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறி வருவதாகவும், சென்னை வண்ணாரப் பேட்டையில் அமைதியாக அறவழியில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது ஏன்? என கேள்வி எழுப்பினார்

டெல்லியை போல தமிழகமும் போராட்ட களமாக மாறி வருகிறது. போராட்டம் நடைபெற்று வரும் வண்ணாரப்பேட்டைக்கு என்று முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றவர்,  தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும், சிஏஏக்கு எதிராக சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதுபோல சுயேச்சை எம்எல்ஏ தமிமும் அன்சாரியும் நோட்டீஸ் கொடுத்திருந்தார்.

இதையடுத்து,  மு க ஸ்டாலின் கோரிக்கைக்கு  பதில் அளித்த சபாநாயகர்,  தமிழக சட்டமன்றத்தில் சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இது தொடர்பாக திமுக கொடுத்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே நிராகரித்த கோரிக்கையை மீண்டும் அவையில் கொண்டு வர முடியாது.

திமுகவின் கடிதத்தை ஏற்பது குறித்தும், நிராகரிப்பது குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது; தீர்மானம் தொடர்பாக என்னை நிர்பந்திக்க கூடாது என்றt;u. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த வாய்ப்பில்லை என திட்டவட்டமா தெரிவித்தார்.

வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக மட்டும் பேரவையில் பேச அனுமதி அளிக்கப்படும் எனவும், சிஏஏ தொடப்பாக பேச அனுமதியில்லை என்றும் மீண்டும் தெரிவித்தார்.

இதையடுத்து, திமுக உள்பட எதிர்க்கட்சிகள் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CAAProtests, dmk, Mkstalin, Resolution cannot be passed against CAA in TN Assembly! says speaker Dhanapal, Speaker, TNAssembly, சிஏஏ, தனபால், தமிழ்நாடு சட்டமன்றம், திமுக, மு.க.ஸ்டாலின்
-=-