‘காதலுக்கு மரியாதை’: மறைந்த மனைவியை மெழுகுசிலையாக வடித்து கொண்டாடிய கணவர்… வீடியோ

தன் மனைவி மீதான ‘காதலுக்கும், அன்புக்கும்  மரியாதை’ செலுத்தும் வகையில், கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து, அந்த சிலையுடன் தனது புதிய வீட்டில்  கிரகபிரவேசம் நடத்தி உள்ளார் கணவர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மனைவியின் மெழுகு சிலையுடன் மகளுடன் காதல் கணவர்

ஆந்திர மாநிலத்தில் இரு பெண் குழந்தைகளுடன் வசித்த வந்த நபர் ஒருவர், கடந்த 10 வருடங்களுக்கு முன் நடத்த விபத்தில் தனது அன்பு மனைவியை இழந்துவிட்டார்.  இதையடுத்து தனது இரு பெண் குழந்தைகளையும் தனியாளாக வளர்த்து வந்தவர், சமீபத்தில்  புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

சொந்த வீடு கட்டுவது தொடர்பாக கணவன் மனைவி இடையே பல கனவுகள் இருந்து வந்த நிலையில், அந்த கனவு தற்போதுதான் நிறைவேறி உள்ளது. இதையடுத்து, தனது வீட்டு கிரகபிரவேசத்தில், மறைந்த  மனைவி கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மற்றும் ஏக்கம் காரணமாக,  மெழுகு சிலை வடிக்கும்  சிற்பி ஒருவர் மூலம் தனது மனைவியின் சிலையை வடிவமைத்துள்ளார்.

இந்த சிலையுடன், தனது இல்ல கிரகபிரவேஷத்தை தனது உற்றார் உறவினர்களுடன் வெற்றிகரமாகவும் நடத்தி உள்ளார்.

உயிருடன் உள்ளதுபோல காணப்படும், அவரது மனைவியின் மெழுகு சிலையைக் கண்டவர்கள், ஒரு நிமிடம் விக்கித்து போனார்கள்.  இருக்கையில் அமர்ந்திருப்பது அந்த நபரின் உண்மையான மனைவியா என்ற கேள்வி பலரிடம் எழுந்தது.

தனது மனைவிமீதுகொண்டகாதலுக்கு எல்லைஇல்லை என்பது நிரூபித்த அவருடன் அவரது இரு மகளுடனும, அந்த சிலையின் இருபுறமும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். மேலும் விழாவுக்கு வந்தவர்கள் பலரும் அந்த மெழுகு சிலையுடன் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படம், வீடியோ வைரலாகி வருகிறது.

மெழுகு சிலை வடிவமைத்த சிற்பி

You may have missed