கோவை,
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், காங்கிரஸ் பிரமுகருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோவையில் நேற்று  நடைபெற்ற கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
evks-elagovan
பின்னர் மாலையில் அவருக்கு திடீரென  மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து உடனிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை  உடனடியாக கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்க. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:,
‘இளங்கோவன் மூச்சுவிட சிரமப்பட்டார். அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  தற்போது நல்ல நிலையில் உள்ளார்.மேலும் பிரச்சினைகள் வராதவாறு  தீவிர சிகிச்சை பிரிவில்  வைத்து கண்காணித்து வருகிறோம்.
நல்ல குணமடைந்தவுடன்  ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்’ என்று தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
கோவை விழாவில் போடப்பட்ட வெடிகளால் ஏற்பட்ட புகை காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.