இடைவெளி விட்டு, வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கும் கேரள குடிமக்கள்

கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில், மக்கள் கூடுவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆனால், மதுபான கடைகளில் மட்டும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அங்கு தற்போதைய நிலையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 268 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  17,743 பேர் தனிமைப்படுத்தப்பட்டு  இருப்பதாகவும், 18,472 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்து உள்ளார்.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு மதுபான விற்பனையும் அமோகமாக அதிகரித்து வருகிறது…

மக்கள் கூட்டம் மதுபான கடைகளில் அலை மோதுவதால், அவர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால், மதுபான கடைகளை மூட  கோரிக்கைகள் எழுந்தன.

ஆனால், மாநில அரசு, கடைகளை மூட நடவடிக்கை எடுக்கமல், மதுபானம் வாங்க வருவோர் சுமார் 1 மீட்டர் இடைவெளியில் வரிசையில்நின்ற மதுபானம் வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர்..

கேரள குடிமக்களும்… தற்போது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்…