தமிழகத்தில் ஜூலை 31 வரை எவை இயங்கும்? இயங்காது? கட்டுப்பாடுகள் அறிவிப்பு

சென்னை: ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாளையுடன் முடிய இருந்த பொது முடக்கத்தை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் ஜூலை 31 நள்ளிரவு வரை பொது முடக்கம் நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை காவல்நிலைய எல்லை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை பொதுமுடக்கம் தொடரும். ஜூலை 6 முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சலுகைகளுடன் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.

6ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம். சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் மக்கள் செல்ல தடை நீடிக்கும், வழிபாட்டுத் தலங்கள், மத கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை இருக்கும். மாவட்டங்களுக்கு இடையே இபாஸ் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

அந்தந்த மாவட்டங்களுக்குள் இ பாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழகம் முழுவதும் அனைத்து ஞாயிறன்றும் எந்த தளர்வுகளும் கிடையாது. 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் தளர்வுகள் இன்றி முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூலை 15 வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி தரிசனம் அனுமதிக்கப்படாது.  சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் அனுமதிபெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்

திருமணம், இறுதிசடங்குகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி தரப்படும்.  பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு தடை தொடரும். அதே நேரத்தில் ஆன்லைன் கல்விக்கு தடையில்லை.தொழில், ஏற்றுமதி நிறுவங்கள் 100% இயங்கலாம்.

டாஸ்மாக் காலை 10 மணி முதல் இரவு 8 மணி திறந்திருக்கும். தேநீர் கடைகள், ஹோட்டல்கள், காய்கறிகளும், மளிகைக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். தேநீர் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் 50% இருக்கை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.