கடும் கட்டுப்பாட்டுகளுடன் தர்பார் ஷூட்டிங்….!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி , நயன்தாரா நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

ஃபோட்டோ ஷூட்டில் தொடங்கி, மும்பை படப்பிடிப்பு வரை தொடர்ச்சியாக ‘தர்பார்’ படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது கடும் கட்டுப்பாட்டில் படப்பிடிப்பு நடைபெறுகிறது ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு யாரும் கேமராவோ, மொபைலோ எடுத்து வர அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், படப்பிடிப்பு தளத்தில் புகைப்படங்கள் எடுக்கும் புகைப்படக் கலைஞரும் அன்றைய தினம் எடுத்த மொத்த புகைப்படங்களையும் மாலையில், படக்குழுவினரிடம் கொடுத்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கார்ட்டூன் கேலரி