இந்தியன் 2 படத்தை கைவிட்டாரா இயக்குனர் ஷங்கர்….!

ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு பிறகு, கடந்த வருடம் கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

கொரோனா லாஃடவுனில் தடைப்பட்டிருந்த படப்பிடிப்பு மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்தும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகள் ஆரம்பித்ததாக தெரியவில்லை.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திற்கான கமலின் போட்டோஷூட் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்காவிட்டால் தான் வேறு படத்தில் பணிபுரிய இருப்பதாக கோரி லைக்கா நிறுவனத்திற்கு ஷங்கர் கடிதம் எழுதியுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

லைக்கா நிறுவனத்தின் CEO, இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. இந்தியன் 2 படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் 500 முதல் 600 பேர் வரை கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் இது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.

கமல்ஹாசனிடம் நேற்று கூட இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து ஆலோசனை செய்தோம், இப்படத்தின் படப்பிடிப்புக்கான திட்டமிடுதல் பணி தற்போது நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.