சென்னை:

ந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பணியாற்றும் ஐடி ஊழியர்களை, தனவசப்படுத்தும் நோக்கில், ‘மீண்டும் எழுச்சிமிக்க பாரதம்-  Resurgent Bharat’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல மென்பொருள் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்எஸ்எஸ் என்ற இந்து அமைப்பு நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை, ஆர்எஸ்எஸ் உறுப்பினராக்கும் முயற்சியில் பிப்ரவரி மாதம் 2ந்தேதி ‘மீண்டும் எழுச்சிமிக்க பாரதம்-  Resurgent Bharat’ என்ற ஸ்லோகத்துடன்  நிகழ்ச்சியை நடத்துகிறது.  நடத்துகிறது.

சென்னை ஓக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள ஏபிஎல் குளோபல் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஆர்எஸ்எஸ் அகில இந்திய பொதுநலன் தலைவர் டாக்டர் அனிருதா தேஷ்பாண்டே தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக, உலகம் முழுவதும் சுமார் 30 நாடுகளில் கிளைகளை பரப்பி உள்ள ஷோகோ  நிறுவனத் தலைவர், ஸ்ரீதர் வேம்பு-வும், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள அசெஞ்சர் மென்பொருள் நிறுவன இந்திய  தலைவர் ராமா எஸ்.ராமச்சந்திரனும் கலந்துகொள்கின்றனர்.

இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மென்பொருட் நிறுவன தலைவர்கள் கலந்துகொள்வது சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக  மென்பொருள் நிறுவனங்ள், தங்களது நிறுவனங்களில், பணியாற்றும் ஊழியர்களிடையே ஜாதி, மத, இன பாகுபாடு காட்டக்கூடாது என்பது நியதி. இதன்படிதான் இந்த நிறுவனங்கள் பல நாடுகளில் தொழில்களை நடத்தி வருகிறது. ஆனால், தற்போது சென்னையில் கிளைகளைக் கொண்டுள்ள ஷோகோ, அசெஞ்சர் நிறுவனங்களின் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டு மக்களிடையே இந்துத்துவாவை ஊக்கப்படுத்தி வரும்  ஆர்எஸ்எஸ் சிறுபான்மையின மக்களை அடியோடு வேரறுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பக்கப்பலமாக மத்திய பாரதியஜனதா அரசும் செயல்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாகத்தான், என்ஆர்சி, சிஏஏ மற்றும் போன்ற சட்டங்கள்.

இந்த நிலையில், ஐடி நிறுவனங்களின் பணியாற்றும் லட்சக்கணக்கான மென்பொறியாளர்களை இந்துத்துவா கொள்கையில் ஈடுபாடு கொள்ளவைக்கும் நோக்கில், ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு, இந்த நிகழ்ச்சியை, மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வரும்  சென்னை ஓஎம்ஆர் சாலையில் நடத்துகிறது. இதற்கு ஆதரவாக  சில மென்பொருள் நிறுவன அதிகாரிகளும், சட்ட திட்டங்களுக்கு முரணாக கலந்து கொள்ள இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்எஸ்எஸ்-சின் இந்த நிகழ்ச்சியை மென்பொருள் நிறுவன ஊழியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் டிவிட்டரில் ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

மதரீதியிலான ஒரு நிகழ்ச்சியில் மென்பொருள் நிறுவன அதிகாரிகள் கலந்துகொள்வது சரியல்ல என்றும், இது மரபை மீறிய செயல் என்றும் கண்டிக்கப்பட்டு வருகிறது.