விலைவாசி உயர்வால் பண வீக்கம் : ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் மாறலாம்

டில்லி

சில்லறை வர்த்தக விலை அதிகரிப்பால் பண வீக்கம் அதிகரிப்பதால் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மத்திய கணக்கியல் துறை அளித்துள்ள விவரத்தின் படி அடிப்படை பொருட்களின் விலை ஜூன் மாத இறுதி வரை 5% உயர்ந்துள்ளது.    இது அதற்கு முந்தைய மாதத்தை விட அதிகமாகும்.  அதே போல எரிபொருளின் விலை 7.1% மற்றும் பழங்களின் விலை 10.1% உயர்ந்துள்ளது.    கடந்த முறை ரிசர்வ் வங்கி இந்த உயர்வை 25 புள்ளிகள் என கணக்கிட்டு இருந்தது.

”இந்த உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ரிசர்வ் வங்கியின் கணக்கில் இருந்து மிகவும் வித்தியாசம்  காணப்படும்.  எனவே ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் இந்த மாறுதல்கள் எதிரொலிக்கும்.” என பிரபல பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் தெரிவித்துள்ளார்.    அவர் கூறியதற்கு இணங்க தற்போது அனைத்து தொழிற்சாலைகளிலும் இந்த ஆறு மாதங்களில் உற்பத்திக் குறைந்து வருகின்றது குறிப்பிடத் தக்கது.

மற்றொரு பொருளாதார வல்லுனரான ஜோஷி, “கடந்த மே மாதம் தொழில் உற்பத்தி விகிதம் 3.2% ஆக உள்ளது.  ஆனால் ஜூன் மாதம் இது சற்றே உயர்ந்துள்ளது.    அத்துடன் பருவ மழைக் காலங்களில் உள்ள நாட்டின் தேவைகள் அதிகரிப்பு மற்றும் ஊதிய உயர்வின் தாக்கமும் மேலும் பணவீக்கத்தை உருவாக்கக் கூடும்.  இது ஒரு சில துறைகளில் மட்டுமே உற்பத்தியை அதிகரிக்கும்.   ஆனால் மொத்தத்தில் உற்பத்திக் குறைவதால் முதலீடுகளும் குறைய வாய்ப்புள்ளது” என தெர்வித்துள்ளார்.

You may have missed