ராகுலுடனான சந்திப்பு: ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து முன்னாள் ராணுவத்தினர் கடும் விமர்சனம்

டில்லி:

ரஃபேல் விமான ஒப்பந்தம் மோடி அரசு மீது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், விமான ஒப்பந்தம் தொடர்பாகவும், ராணுவ வீரர்களுக்கு மோடி அரசு செய்து வரும் துரோகம் குறித்தும் முன்னாள் ராணுவ வீரர்கள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளனர்.

ரஃபேல் போர் விமான விவகாரம் உச்சநீதி மன்றம் வரை சென்றுள்ள நிலையில்,  ரஃபேல் விமான விலை விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் ராணுவ அதிகாரி களை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது,  ராணுவ வீரர்களின் ஒய்வூதிய முரண்பாடு,  ரஃபேல் போர் விமானம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவத்தினர், ரஃபேல் போர் விமானம், காஷ்மீர் பிரச்சினை, ஓய்வூதியம் குறித்து மோடி அரசை கடுமையாக சாடினர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பலர்  ரஃபேல் போர் விமானம் முதலில் 126வாங்குவது என முடிவெடுத்த நிலையில், பின்னர்  36 விமானங்கள் மட்டுமே வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு குறித்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்தனர்.

நாங்கள் பிரதமரின் தனிப்பட்ட ஒருமைப்பாட்டை சந்தேகிக்கவில்லை என்று கூறிய ஓய்வு பெற்ற ராணுவத்தினர்,  கட்சியின் நிதிக்காக சில ஆயிரம் கோடி … ஆனால், விமான விலையில் ஏறத்தாழ 1,100 கோடி வேறுபாடு ஏன்?  என்று கேள்வி எழுப்பினர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய  ஓய்வுபெற்ற மார்ஷல் கடிதம் விமான ஒப்பந்தம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும் கூறினார். அதில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் இதுபோன்ற விமானங்கள் வாங்கியபோது,  விமான சோதனை மற்றும் புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தெளிவான மற்றும் தொழிற்முறை பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தை சுட்டிக்காட்டியதாக கூறினார்.

தற்போதைய நிலையில்,  “மிக் 21 & 27 ரக விமானங்கள் நமது நாட்டின்  42 படைபிரிவுகளில் 21 படைப்பிரிவுகளில்  மட்டுமே இயங்குகின்றன.  எட்டு படைபிரிவுகளில் செயல்படவில்லை  என்றும், இது எப்படி  படைப்பிரிவின் தேவைகளை நிறைவேற்றும்? என்று கேள்வி எழுப்பினார்.

வேறு சிலர், ரஃபேல் விமான ஒப்பந்ததத்தில்,  பொது விதிகள் மீறப்பட்டுள்ளன என்று  குற்றம் சாட்டிய நிலையில், “யாருடைய வேண்டுகோளின் பேரில் பிரதம மந்திரி 36 விமானங்களை வாங்க முடிவு செய்தார்? விமானப்படைத் தலைமை அவருக்கு கடிதிம் எழுதியதா? இதன் நோக்கம் என்ன? “என கேள்வி எழுப்பினர்.

மற்றும் பலர்,  ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் முரண்பாடு களை கூறி, ஒரே ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ற தங்கது கோரிக்கையை  நிறைவேற்றுவதில் மோடி தோல்வி அடைந்தார், இந்த விஷயத்தில் தேசத்தை மோடி  தவறாக வழி நடத்தியதாகவும்  குற்றம் சாட்டினர்.

வேறு சிலர், கங்கை சுத்தம் செய்தல், கும்ப மேளா மற்றும் பாலங்கள் கட்டும் பாதுகாப்பு போன்ற பொதுமக்கள் வேலைகளுக்கு ராணுவம் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவதாதால் வீரர்களின் மனநிலையும் கவுரவமும் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் வேதனைப்படு கிறார்கள், என்றும் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்ததில் இருந்து  ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை தீவிர மடைந்து உள்ளதாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள  தற்போதைய நிலைமை நாட்டிற்கு ஆபத்தானதாக இருப்பதாகவும்,  இந்த விவகாரத்தில்,  பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு “மக்களுடைய போர்” என்று முன்வைத்து வெற்றி பெற்று வருகிறது என்றும், காஷ்மீர் விவகாரத் தில்,  புதிய போராளிகளில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் உள்ளூர் இளைஞர்களாக இருப்பதாகவும் கூறினர்.

தற்போது அங்கு நடைபெற்று வரும் போரில், ராணுவத்தின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், கடந்த 1991-96ம் ஆண்டின் நிலைமை உருவாகி இருப்பதாகவும் கூறி முன்னாள் ராணுவத்தினர், இந்த நிலைமைக்கு  உள்துறை அமைச்சகமோ, மாநில அரசுக்கு பொறுப்பு இல்லை என்று குற்றம் சாட்டினர்.

மோடி அரசால், அனில் அம்பானிக்கு 30,000 கோடி ரூபாயை வழங்கப்படுகையில், எங்களின்  வீரர்களுக்கு 8,300 கோடி ரூபாயை வழங்க முடியாதா? என்றும் கேள்வி எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து அவர்களிடம் பேசிய ராகுல்,  2019- பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ‘ஒரே பதவி – ஒரே பென்ஷன்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

மேலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பிரதமர் மோடியால் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published.