தமிழக லோக்ஆயுக்தா தேடுதல் கமிட்டி தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்

சென்னை:

மிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் லோக்ஆயுக்தாவுக்கு தேடுதல் கமிட்டி தலைவராக முன்னாள் நிதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதி மன்றம் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.  அதைத்தொடர்ந்து  கடந்த ஜூலை 9-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அமைக்கப்பட உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர் இடம்பெற்றிருப்பர். இந்த 3 பேர் குழு லோக் ஆயுக்தா வுக்கு  தகுதி வாய்ந்த நபர்களை பரிந்துரை செய்வதற்காக  தேடுதல் கமிட்டி எனப்படும் தேடுதல் குழுவை நியமிக்கும். நியமிக்கப்படும் தேடுதல் குழுவானது தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, தேர்வுக் குழுவிடம் வழங்கும். பின்னர் தேர்வுக் குழு பரிந்துரை யின் அடிப்படையில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.

இந்த நடைமுறையின் முதற்கட்டமாக, தேடுதல் குழுவை தேர்வு செய்வதற்கான, தேர்வுக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலினுக்கு அரசு அழைப்பு அனுப்பியிருந்தது. ஆனால். கூட்டத்தில்பங்கேற்க முடியாது என்று ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து,  தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகர் தனபாலும் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்தில் லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவ ராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படுவது என முடிவெடுத்துள்ளனர்.

மேலும் தேடுதல் குழு உறுப்பினர்களாக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாரி ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Lok Ayukda Search Committee, Tamilnadu Governmnet, Venkatraman, எடப்பாடி பழனிச்சாமி, ஓய்வுபெற்ற நீதிபதி, தனபால், தமிழக லோக்ஆயுக்தா, தேடுதல் கமிட்டி, வெங்கட்ராமன்
-=-