மாரடைப்பு: முன்னாள் நீதிபதி தனபாலன் காலமானார்

சென்னை:
யர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி வி.தனபாலன் மாரடைப்பு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார்.

கடந்த 2015ம் ஆண்டு மே 31ந்தி ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.தனபாலன் இன்று காலை மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினர்.

நாகை மாவட்டம் செய்தூர் கிராமத்தில் பிறந்த வி.தனபாலன்,  சீர்காழியில் பள்ளிப்படிப்பையும், மயிலாடுதுறை யில் பட்டப்படிப்பையும், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தவர்.

வழக்கறிஞராக பணியாற்றி வந்த அவர் கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 10–ந் தேதி உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 10 ஆண்டுகள் உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி வி.தனபாலன் இன்று காலை இயற்கை எய்தினார்.