திருப்பதி:    ஓய்வு பெற்ற நீதிபதியும், மனைவியும் அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் அவரது மனைவியும் அடுத்தடுத்து ரயில் முன்  பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பதியில் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியான பி.சுதாகர் என்பவர் திருப்பதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் திருப்பதி – ரேணிகுண்டா ரயில் நிலையங்கள் இடையே, அந்த வழியாகச் சென்ற ரயில் ஒன்றின் முன் பாயந்து தற்கொலை செய்துகொண்டார்.

தீராத நோய் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும் என்று காவல்துறை முதலில் தெரிவித்தது. பிறகு தனது சாவுக்கு யாரும் காரணமல்ல என்று இவர் எழுதிவைத்த கடிதம் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் சுதாகரின் தற்கொலை குறித்து அறிந்த அவரது மனைவி வரலட்சுமியும், அதே பகுதியில் மற்றொரு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

கணவனும் மனைவியும் அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பதி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.