டில்லி,

ந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.  நேற்று நடைபெற்ற  நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த போட்டியுடன் ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு, இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஒவர் கிரிக்கெட் போட்டி டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்து,  இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதை யடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான  ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் அதிரடியாக ஆடி தலா 80 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

பின்னர், களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும், தோனியும் தங்கள் பங்கிற்கு சிக்சர்களை விளாச, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 202 ரன்களை எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி களமிறிங்கியது.

அணி இந்திய அணி பந்துவீச்சாளர்களின்  பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களிலேயே 8 விக்கெட்டு களை பறிகொடுத்து, 140 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இந்திய அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

37 வயதாகும் ஆசிஷ் நெக்ரா துல்லியமாக பந்துவீசுவதில் வல்லவர்.  ஐபிஎல் தொடரில், 100 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.  83 ஆட்டங்களில் மொத்தம் 300.5 ஓவர்கள் வீசி 2340 ரன் விட்டுக் கொடுத்து 100 விக்கெட்டை தொட்டுள்ளார்.