கொல்கத்தா:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட  அவருக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம்  மறுத்துவிட்டது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கர்ணன், கோல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டு  கொல்கத்தாவில் உள்ள பிரெசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறையில்   கர்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த காவலர்கள் அவரை கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அவருக்கு மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்