Random image

உத்தரபிரதேசம்: ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் பட்டப்பகலில் அடித்துக் கொலை….அதிர வைத்த வீடியோ

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் ஓய்வுபெற்ற 70 வயது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நிலக் தகராறில் 3 பேரால் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் சிவ்குட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அப்துல் சமத் கான் என்ற அந்த முதியவர், தாக்குதலில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முயன்றார். ஆனால், அந்த 3 நபர்களும் இரக்கமின்றி அவரை கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. இதில் அந்த சம்பவம் நடந்த போது பலர் அந்த பகுதியை கடந்து சென்ற காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், அதை யாரும் கண்டு கொள்ளாமல் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூ¬ன்த், முகமது யூசுப் மற்றும் ஒரு நபர் சேர்ந்து குச்சியால் அகமது கானை கடுமையாக தாக்கினர். ஆனால், அவ்வழியாக சென்ற யாருமே அவரை காப்பாற்றவோ? தடுக்கவோ? முயற்ச்சிக்கவில்லை. இந்த 3 பேர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முகமது யூசுப் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார். இச்சம்பத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு வீட்டார்களா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து புதன்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து எஸ்பி பிரிஜேஷ் குமார் ஸ்ரீவத்சவா கூறுகையில்,‘‘கொலை செய்யப்பட்ட அப்துல் சமது கானுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே ஒரு வீடு தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று சைக்கிளில் சென்று கொண்டருந்த அப்து சமதை முகமது யூசுப், இவரது சகோதரர் முகமது செபு மற்றும் உறவினர் ஒருவரும் சேர்ந்து மறித்து, குச்சியால் அடித்துள்ளனர். படுகாயத்துடன் அவரை சாலையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்துல் சமத் நேற்று மாலை இறந்தார்’’ என்றார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘‘ஜூனைத் என்பவர் நில அபகரிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதற்கு முன்பே அவர் மீது உள்ளூர் மக்கள் பல புகார்களை அளித்துள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் அவர் தொடர்ந்து மக்களை அச்சறுத்தி வந்தார். ஜூனைத் மீது 10 வழக்குகள் நிலையில் உள்ளது’’ என்றனர்..