டில்லி

த்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடைபெற்று வரும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் காவிரி ஆணயம் அமைப்பு, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக உறுப்பினர்கள் தினமும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.   இதற்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் அவை நடவடிக்கைகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.   உறுப்பினர்கள் எழுப்பியுள்ள வினாக்களுக்கு எழுத்து பூர்வ பதில்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு  ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கும் அரசு எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளது.  இந்த பதிலில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு கிடையது.   நாடு முழுவதும் தற்போது சுமார் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர்.  இவர்களின் தற்போதைய ஓய்வு பெறும் வயதான 60 வயதே இனியும் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.