‘ரீயுனைட்’ காணாமல் போன குழந்தைகளை கண்டறிய புதிய மொபைல் செயலி: மத்தியஅமைச்சர் வெளியீடு

டில்லி:

காணாமல் போன குழந்தைகளை கண்காணிப்பதற்கான மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது.  மத்திய வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இந்த செயலியை வெளியிட்டனர்.

நாடு முழுவதும் காணாமல் போகும் மற்றும் கடத்தப்படும்  குழந்தைகள் குறித்து கண்காணிக்கும் வகையில்,  பச்பன் பச்சோ ஆந்தோலன் அமைப்பின்  நிறுவனர் சத்யார்த்தி கைலாஷ் , பிரபல ஐடி நிறுவனமான கேப் ஜெமினியுடன  இணைந்து ‘ரீயுனைட்'(ReUnite) என்ற மொபைல் செயலி தயாரித்துள்ளனர்.

இந்த செயலி மூலம் காணாமல் போன குழந்தைகள் சென்ற தடத்தை கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மொபைல் செயலியை மத்திய  வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் வெளியிட்டனர்.  இந்த செயலி குறித்து பேசிய கேப் ஜெமினி தலைமை நிர்வாகி  கூறும்போது,  காணாமல் போன மற்றும் கைவிடப்பட்ட  குழந்தைகளை பற்றி பெற்றோர் மற்றும் பொது மக்கள் இந்த ஆப்பின் மூலம் குழந்தைகளின் விவரங்கள் மற்றும்  புகைப்படங்களுடன் புகார் அளிக்கலாம்.

காணாமல் போன குழந்தைகளின் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் வகையில் டில்லி காவல்துறையிடம் இருக்கும் காணாமல்போன குழந்தைகள் பற்றிய தகவல்களுடன் இந்த ஆப் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த செயலி மூலம்க  அமேசான் வெப் சர்வீஸ்களில் ஒன்றாக இருக்கும் முகம் அறிதல் (ஃபேஷ் ரெக்கனைஷன்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெறப்படும் முடிவுகளை வைத்து குழந்தை இருக்கும் இடத்தை கண்டறிய முடியும் என்றும்கூறினார்.

விழாவில் பேசிய பச்பன் பச்சோ ஆந்தோலனின் நிறுவனர் சத்யார்த்தி, காணாமல் போன குழந்தைகளை நாம் வெறும் புள்ளிவிவரங்களாக பார்க்கிறோம், ஆனால் குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு அது மீள முடியாத துன்பமாகும்  இந்த  குழந்தைகளை கண்டுபிடிப்பது மட்டுமே  இழந்து குடும்பத்தின்  கனவாகவும், இறுதி ஆசையாகவும் இருக்கின்றது.

ஒவ்வொரு ஆண்டும், சுமார் 44,000 குழந்தைகள் வரை காணாமல் போகின்றனர். இவர்களில் 11,000 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர் என்றார். தற்போது செயல்படுத்தப்படும் இந்த செயலி காரணமாக குழந்தைகள் காணாமல் போவது ஓரளவு தடுக்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Reunite': the New Mobile App for find absconding children, 'ரீயுனைட்' காணாமல் போன குழந்தைகளை கண்டறிய புதிய மொபைல் செயலி: மத்தியஅமைச்சர் வெளியீடு, Central Minister released
-=-