சென்னை:

மிழகத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தற்காலிக ஊழியர்கள் 37 பேரை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இது பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களின் மறுமதிப்பீடு விவகாரத்தில், கோடி கணக்கில் பணம் விளையாடிது தெரிய வந்தது. 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த முறைகேடு குறித்து விசாரிக்க பல்கலைக்கழக துணைவேந்தர்  சூரப்பான குழுவை அமைத்தரார். இந்த குழுவினர் ஏராளமானோரிடம் விசாரணை நடத்தியது.அதில் அண்ணா பல்கலைக்காகத்தில் பணியாற்றி வந்த 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை பதவி நீக்கம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம்  முடிவு செய்தது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப் பட்டது. அந்த   கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, சேலம், மதுரை உள்பட 5 மண்டலங்களைச் சேர்ந்த 37 தற்காலிகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளை காப்பாற்ற தற்காலிக ஊழயர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.