டந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு காரில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நடிகைக்கு ஆதரவாக போலீசில், வாக்குமூலம் அளித்திருந்த மலையாள நடிகர்-நடிகைகள் நீதிமன்றத்தில், பல்டி அடுத்த வண்ணம் உள்ளனர்.

அண்மையில் அரசு தரப்பு சாட்சியான நடிகை பாமாவும், நீதிமன்றத்தில் ஆஜராகி.,போலீசில் தான் அளித்த வாக்குமூலம் குறித்து முரண்பட்ட கருத்தை தெரிவித்தார்.

இதனால் அவரை பிறள் சாட்சியாக அறிவிக்குமாறு அரசு தரப்பு, நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில்,நடிகைக்கு ஆதரவாக இருந்த நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக பின் வாங்குவது குறித்து நடிகை ரேவதி, வருத்தம் தோய்ந்த வார்த்தைகளில் தெரிவித்திருப்பதாவது:

‘’ கடைசியில் பாமாவும், பின் வாங்கி விட்டார். பாதிக்கப்பட்ட நடிகையின் தோழியாக இருந்த அவரே இப்போது ஏன் இப்படி மாறினார் என்பது தெரியவில்லை.

சினிமாவில் நெருங்கிய சகாக்களை கூட நம்பக்கூடாது என்பது வேதனை அளிக்கிறது.
எத்தனை சினிமாக்களில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றியுள்ளோம்…ஆனால் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை என்றால் எல்லோருமே ஓடி ஒழிந்து கொள்கிறார்கள்..

போகட்டும். ஆனால் நான் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவே இருப்பேன்’’ என்று நடிகை ரேவதி தனது முகநூல் பக்கத்தில் கோபமுகம் காட்டியுள்ளார்.

-பா.பாரதி.