நெட்டிசன்:
யாழினி சுதா அவர்களின் முகநூல் பதிவில் இருந்து:
பேரறிவாளன் தாக்கபட்ட நெருங்கிய நண்பர்கள் காரணம் என்று ஒரு (இணைய) இதழில் செய்தி வெளியாகி இருக்கிறது.  அப்படியானால் நண்பர்களுக்கு இவர் என்ன செய்தார்?, அந்த நண்பர்களுக்கு இவரைத் தாக்குவதால் என்ன பயன்? யார்இந்த நெருங்கிய நண்பர்கள்? நட்பாக பழகியவரைத் தாக்க மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாராவது முனைவார்களா…?
எழுவர் விடுதலைக்காக பேரறிவாளன் பாடுபடுவதாகவும் அந்த கட்டுரையில் எழுதியிருக்கிறார்கள்.  அப்படியானால் இந்த 25 வருட காலத்தில் வாரா வாரம் சிறைக்கு பேரறிவாளனை பார்க்கப் போகும் அவரது தாயார் ஒரு தடவை கூட நளினி , முருகன் மற்றும் சாந்தனை மனுப் போட்டுப் பார்க்வில்லையே! இதனை சிறைப் பதிவுகளை உறுதுப்படுத்துகிறதே! நளினி விடுதலையினை தடுப்பதற்காக பல உள்குத்தல் வேலைகள் நடந்தமைக்கு பல ஆதாரம் பதிவுகள் உள்ளனவே.
arivu-hospital
“மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்தால் தான் நான் விடுதலையாகிப்  என்று பேரறிவாளன் பிடிவாதம் பிடிப்பதாகவும் எழுதியிருக்கிறார்கள். பரோலில் கூட வரமுடியாது போராடுகிறார் பேரறிவாளன். அப்படி இருக்க அவரை விடுதலை செய்தும் ‘ மாட்டேன்” என்கிறாரா? என்னப்பா இது.. இது அறிவான செயலா..? பேரறிவாளன் விடுதலையானால் மற்றவர்கள் படிப்படியாக விடுதலையாக முடியும் என்பது கூட புரியாத முட்டாள்களா..? மற்றவர்கள். இந்த செய்தியின் மூலம் என்ன சொல்ல முன் வருகிறார்கள்? ஒரே குழப்பபாக உள்ளதே..! தெளிவு படுத்துவார்களா…?
நளினி தரப்பினர் அரசுக்கு எதிராக உள்ளனர் என்பது போலவும் எழுதியிருக்கிறார்கள். அற்புதமான கொம்பு சீவிவிடும் உத்தி இது. நளினி அரசுக்கு எழுதிய மனுக்களை வெளியிட்டால் அந்த வாசகத்தின் உள் நோக்கம் அம்பலம்பட்டுப் போகும்.
தனக்கு சிறையில் உயிராபத்து, பாதுகாப்பு இல்லை எனப்பிரச்சாம் செய்வது அரசுக்கு எதிரானது இல்லையா..!
பேரறிவாளன் தாக்கப்பட்டது மிக வேதனைக்கு உரிய விடயம். அதில் இப்படி அரசியல் கலந்த உள்குத்தல் கருத்துப் பிரச்சாரம் அவசியமா…? உண்மைகளை மறைத்து நடக்காத பொய்களை பரப்ப வேண்டிய அவசியம் என்ன..? அனைத்து உண்மைகளையும் பேரறிவாளன் கைப்பட எழுதி அம்பலப்படுத்த முன் வருவாரா..?