என் மீது பழிவாங்கும் நடவடிக்கை! கலையரசன்!

--

சென்னை,

ட்சியை கைப்பற்ற நினைத்தால் முதல்வர் கையை வெட்டுவேன் என்று சொன்ன அதிமுக எம்எல்ஏ கலைராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது.

,இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கலைராஜன், இது பழி வாங்கும் செயல் என்று கூறினார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதலை தொடர்ந்து ஓபிஎஸ் தனி அணியாகவும், சசிகலா தனி அணியாகவும் திரண்டுள்ளனர். இந்நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு போயஸ் தோட்டத்தின் முன்பு பேசிய  கலைராஜன், ஓபிஎஸ்  கட்சியை கைப்பற்ற நினைத்தால்  கையை வெட்டுவேன் என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

அவரது மிரட்டல் குறித்து கடந்த 10ந் தேதி சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரான செல்லப் பாண்டி என்பவர், கலைராஜன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து,  தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் மீது கொலை மிரட்டல் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் கலைராஜனை கைது செய்வது குறித்தும் காவல்துறையினர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசியது தவறு என்று கூறியும் தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கலைராஜன் கூறியுள்ளார்.