வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

--

சென்னை:

ருவாய் துறை அலுவலர்கள் கோரிக்கைகள் போராட்டம் குறித்து  பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தமிழ்நாடு வருவாய்த்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறையினர் கோரிக்கை விடுத்ததோடு, தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 5 மற்றும் 6ம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்,  வருவாய் துறை அலுவலர்கள் கோரிக்கைகள் போராட்டம் குறித்து  பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தமிழ்நாடு வருவாய்த்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

வருவாய் துறை அலுவலர்களின் அவர்களின் பணி மக்கத்தானது; அவர்கள் கோரிக்கைகளை போராட்டம் மூலமாக அல்லாது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.