சபரிமலை மறுஆய்வு மனு: தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!

டில்லி:

பரிமலை விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புகு எதிராக தொடரப்பட்ட மேல்முறை யீடு மனுமீதான விசாரணையில், ஏற்கனவே உச்சநீதி மன்றம் அறிவித்த தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்ற அமர்வு, வழக்கை ஜனவரி 22ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ம் தேதி பரபரப்பு  தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி,  ஏராளமான மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மனுமீதான விசாரணை பிற்பகல் நடைபெறும் என கூறப்பட்டது.

இதற்கிடையில், சபரிமலை கோயில் தொடர்பான சீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசா ரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த  நீதிபதிகள், மேல்முறையீடு குறித்து நீதிபதியின் அறையில்தான் விசாரிக்க முடியும் என அறிவித்தனர்.

அதன்படி இன்று பிற்பகல் சபரிமலை தீர்ப்பு குறித்த மேல்முறையீறடு மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.

அப்போது உச்சநீதி மன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி மனு தாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினர். மேலும்,  வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 22ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்று வழக்கு மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்படும் என்று கூறி உள்ளனர்.