டெல்லி:  நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் வரும் 13ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா, பரவல் காரணமாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என  பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், தேர்வை நடத்திய தீர வேண்டும் என மத்தியஅரசும், உச்சநீதி மன்றம் பிடிவாதமாக கூறி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கேசவ் மகேஸ்வரி என்பவர் உள்பட சிலர் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்  வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த புதிய மனுக்கள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் பூ‌‌ஷண் தலைமையிலான  அமர்வில் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.